Main Menu

தவறான கொரோனா வைரஸ் தகவல் அடங்கிய சுமார் 70 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கம்

பேஸ்புக் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. 

இதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலியில் இருந்து மற்றவர்களை இழிவுப்படுத்தும் தகவல் அடங்கிய சுமார் 2.25 கோடி பதிவுகள் நீக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 96 லட்சம் அதிகம் ஆகும். 

இத்துடன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த சுமார் 87 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 63 லட்சம் வரை அதிகம் ஆகும். 
தரவுகளை ஆய்வு செய்ய ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அலுவலகத்தில் தரவுகளை ஆய்வு செய்வோர் மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பதே ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்த காரணமாக கூறப்பட்டது.

பகிரவும்...