Main Menu

தலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்!

தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு குறித்து, ஆய்வை நடத்தும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘டெல்டா மாறுபாட்டின் அறிகுறியானது இளையவர்களுக்கு மோசமான குளிர் போல உணரக்கூடும் எனவும் அவர்கள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்றாலும், அவை தொற்றுநோயாகவும் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தங்களுக்கு கொவிட் இருக்கலாம் என்று நினைக்கும் எவரும் ஒரு சோதனை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருமல், காய்ச்சல், வாசனை அல்லது சுவை இழப்பு ஆகியன மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய கொவிட் அறிகுறிகளாகும்.

இதுகுறித்து பேராசிரியர் ஸ்பெக்டர் கூறுகையில், ‘இவை இப்போது குறைவாகவே காணப்படுகின்றன’ என கூறினார்.

ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...