Main Menu

தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர்.

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தலிபான்கள் பேசியதற்கு முரண்பட்டதாக உள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி, பிரதமர் தவிர மற்ற அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள் என்றும் நிறுவனத் தலைவர்களாக இருக்கலாம் என்றும் அப்போது தலிபன்கள் கூறியிருந்தார்கள்.

இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும் என்று கட்டாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் அப்பாஸ் ஸ்டானேக்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பெண்களுக்கு உயர் நிலையில் பொறுப்புகள் வழங்கப்படாது. கீழ் நிலைப் பதவிகளில் அவர்களுக்கு இடம் அளிக்கப்படும்.

கடந்த இரு தசாப்தங்களில் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள் யாரும் தலிபான்களின் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்’ என கூறினார்.

இதனிடையே, அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்ததை அமைத்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு தலிபன்களுக்கு அழுத்தம் தர ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

பகிரவும்...