Main Menu

தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சுப் பதவிகளை ஏற்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கடிதம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவியை ஏற்காது வெளியில் இருந்து சர்வகட்சி ஆட்சிக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தீர்மானித்திருப்பதாகவும் இது தொடர்பான கடிதம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அண்மையில் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டில் தற்போது எற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக அனைத்து மக்களும் பாரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளார்கள்.

நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையில் எந்தவிதமான அபிவிருத்தியையும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

மேலும் சர்வகட்சி அரசாங்கத்தில் குறைந்த அளவிலான அமைச்சர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாட்டு மக்களும் போராட்டக்காரர்களும் விரும்புகின்றார்கள்.

சர்வதேசமும் அதனையே விரும்புகின்ற நிலையில், அதற்கு வழிவிட்டு விட்டுக் கொடுப்புடன் ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தை மேலும் சிக்கலில் கொண்டு செல்லாமல் நாம் வெளியில் இருந்து கொண்டு முழுமையான ஆதரவை வழங்கி மக்களுக்கு நல்லது நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...