Main Menu

தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் – முதலமைச்சர்

பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்வு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

நீர் மேலாண்மை திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும். விவசாயம் பற்றி தெரியாக ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும்.

எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...