Main Menu

தன்னிச்சையாக தடுப்பூசி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது- உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மருந்து நிறுவனங்களுடன் தனித்தனியாக தடுப்பூசி ஒப்பந்தங்களுகக்கான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் இன்று அறிவித்துள்ளார்.
,
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்தும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு தொடர்ந்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றியத்தின் சட்டப்பூர்வ நியதி அடிப்படையில் எந்தவொரு உறுப்பு நாடுகளும் ஒன்றியத்துக்கு இணையாக பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது இணையாக ஒரு ஒப்பந்தத்தை வைத்திருக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் இப்போது 380 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் திறனைக் கொண்டுள்ளது எனவும், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் 80 வீதத்திற்கும் அதிகமான தொகையினர் என்றும் டெர் லேயன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...