Main Menu

தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டிய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ்- நெதர்லாந்து நாடுகள் சேர்ப்பு

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் மக்கள், தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து வரும் மக்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) கூறுகையில், ‘இந்த நடவடிக்கை மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ் மற்றும் கைகோஸ் மற்றும் அருபாவிலிருந்து பயணிக்கும் மக்களுக்கும் பொருந்தும். கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குறைக்க இது அவசியம்’ என கூறினார்.

பிரித்தானியாவின் இந்த முடிவு பரஸ்பர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்ஸின் வெளியுறவுத்துறை செயலாளர் கிளெமென்ட் பியூன், ‘பிரித்தானியாவின் முடிவு பிரான்ஸ்காரர்களுக்கு மிக வருத்தத்தை அளிப்பதாக’ டுவீட் செய்துள்ளார்.

பிரித்தானியா அரசாங்கத்தின் முடிவு சமீபத்திய நாட்களில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து வருகின்றது.

பகிரவும்...