Main Menu

தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நடிகர் மோகன்

தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன். இவர் தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தனது திரைப்பட அனுவங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், தான் முதலில் தனது ஆடை வடிவமைப்பாளரான ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரை பிற்காலத்தில் நடிகர் விஜய்க்கும் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் கூறினார்.

நடிகர் மோகனின் நடிப்பில் வெளியாகிய பயணங்கள் முடிவதில்லை,  இளமைக்காலங்கள்,  உதயகீதம், நெஞ்சத்தைக் கிள்ளாதே,  மூடுபனி உள்பட பல திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்...