Main Menu

தடுப்பூசி கொண்டு செல்ல இராணுவம் பயன் படுத்தப்படலாம்: ஜேம்ஸ் க்ளெவர்ளி

ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை பெல்ஜியத்திலிருந்து பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல இராணுவம் பயன்படுத்தப்படலாம் என்று வெளியுறவு அலுவலக அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்ளி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் போடும் பணிகளை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்படுகின்றது.

சுகாதார ஊழியர்கள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்கள் முதலில் கொவிட்-19 தடுப்பூசி பெறுவார்கள்.

இங்கிலாந்தில், 50 மருத்துவமனைகள் ஆரம்பத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை போடும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளும் தங்களது தடுப்பூசி திட்டங்களை மருத்துவமனைகளில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கும்.

பகிரவும்...