Main Menu

காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலை வணங்காது- மம்தா

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (திங்கட்கிழமை) பேரணி ஒன்றில் பங்கேற்றார்.

குறித்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “நாம் எவ்வளவு வேலை செய்தாலும், அவை அனைத்துமே மோசமானவை என முத்திரை குத்தப்படுகின்றன.

பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. அது பா.ஜ.க.வினருக்கு மோசமானதாக தெரியவில்லை.  ஆனால், அவர்கள் புயல் பாதிப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட கணக்கு விபரங்களை கேட்கின்றனர்.

இதேவேளை மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...