Main Menu

டோக்கியோவில் சிவப்பு எச்சரிக்கை: தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) குடிமக்களுக்கும் வணிகத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், டோக்கியோ ஆளுனர் யுரிக்கோ கொய்கே இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

மேலும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு டோக்கியோ வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள நாடக அரங்கு ஒன்றில் நாடக உறுப்பினர் ஒருவருக்குக் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கங்களில் சமீபநாட்களில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 22,508பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 984பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...