Main Menu

டொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவினை அச்சுறுத்தும் டொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரத்திலிருந்த வீடுகள் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

பஹாமாசின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன், டொரியன் புயல் காரணமாக தென் கரோலினா பகுதியிலுள்ள 64 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த புயல்காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 1992ஆம் ஆண்டு பஹாமாவை புயல் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...