Main Menu

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுகிறது – ஜெய்சங்கர்

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மார்க் ஆகியவற்றுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவர், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெப் கேபோடை சந்தித்து பேசியுள்ளார்.

இதன் பின்னர் இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், டென்மார்க்குடன் இந்தியாவுக்கு தனித்துவமான உறவு உள்ளதாக தெரிவித்தார்.

டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுகிறது. வெறும் வளர்ச்சி மட்டுமன்றி, மீண்டும் பசுமை வளர்ச்சி அடைய விரும்புகிறோம். அதற்க டென்மார்க் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த கூட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கூட்டு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனில் 10 செயற்குழுக்கள் உள்ளன. அதில் சுகாதாரத்திற்காக புதிய செயற்குழு 11 ஆவதாக இணைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...