Main Menu

டென்மார்க்கில் விலங்குகளை தாக்கும் கொரோனா – முக்கிய நகரங்கள் முடக்கம்

மிங்க் எனப்படும் சிறிய வகை விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை டென்மார்க்கில் உறுதிசெய்யப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டென்மார்க்கின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள், உணவகங்கள் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிங்க் எனப்படும் குறித்த சிறிய வகை விலங்கினத்திற்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை மனிதர்களுக்கும் பரவக்கூடும் எனும் அபாயத்தின் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் ஏறக்குறைய 17 மில்லியன் மிங்க் இன விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில், கூடிய விரைவில் அவை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

பகிரவும்...