Main Menu

டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜோகோவிச்சை நெருங்கும் நடால்!

டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்.

இதில் செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். ஜோகோவிச் 9,865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

நடைபெற்று முடிந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற, ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 9,225 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், 7130 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நடைபெற்று முடிந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த, ரஷ்யாவின் இளம் வீரர் டேனில் மெட்வடேவ் தரவரிசையில் 10 இடங்கள் வரை முன்னேறி, நான்காம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

ஒஸ்திரியாவின் டோமினிக் தீயேம் 4575 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் 4095 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், கிரேக்கத்தில் ஸ்டெபெனோஸ் ஸிட்ஸிபாஸ் 3420 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், ஜப்பானின் கெய் நிஷிகோரி 3375 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 2810 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா அகுட் 2575 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

பகிரவும்...