Main Menu

ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள முடக்கநிலை நீடிப்பு!

ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.

ஆனால், உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்கள் இணைந்து இந்த முடிவினை எடுத்துள்ளனர்.

‘இந்த வைரஸின் அச்சுறுத்தலுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது’ என்று மேர்க்கெல் மாநில முதல்வர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடங்களிடம் கூறினார்.

பெரும்பாலான கடைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களான உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டிருக்கும். புதிய நடவடிக்கைகளில் சில பொது இடங்களில் அணிய வேண்டிய முகக்கவசங்கள் குறித்த கடுமையான விதிகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்கள் மீது அதிக பொறுப்பு ஆகியவை அடங்கும்.

சமீபத்திய நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள் குறைந்து வருகின்றன மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் அழுத்தம் சற்று குறைந்துவிட்டாலும், பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டவை போன்ற தொற்று வகைகள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பரவக்கூடும் என்று வைராலஜிஸ்டுகள் கவலைப்படுகிறார்கள்.

பகிரவும்...