Main Menu

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் உயர்வு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் எண் (ஆர்) உயர்வடைந்துள்ளதாக, நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் வைரஸ் எவ்வளவு பரவுகிறது என்பதை தொற்று வீதம் எண் (ஆர்) குறிக்கிறது. 1 தொற்று வீதம் என்றால் கொரோனா வைரஸ் உள்ள ஒவ்வொரு நபரும் சராசரியாக ஒரு நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்.

ரொபர்ட் கோச் நிறுவனம் (Robert Koch Institute) வெளியிட்டுள்ள தரவு ஜேர்மனியின் ஆர்-எண்ணை 2.88 ஆக வைத்திருக்கிறது.

வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட வேண்டுமானால் ஜேர்மனி 1ஐ விடக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அதிபர் அங்கேலா மேர்க்கெல் பலமுறை கூறியுள்ளார். மே மாதத்தில், ஜேர்மனியின் ஆர்-எண் 0.75 ஆக குறைந்தது.

டோனீஸ் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் 1,331 நேர்மறையான தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கெட்டர்ஸ்லோவில் உள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

இந்த மாத தொற்று பரவல் ஜேர்மனியின் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்துறையை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. லோயர் சாக்சனியில் உள்ள டிஸென் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள கோஸ்ஃபீல்ட் ஆகிய ஆலைகளில் தொற்றுகள் மே மாதத்தில் பதிவாகியிருந்தன.

பகிரவும்...