Main Menu

ஜேர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு தீர்மானம்!

ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

குறைந்தது எதிர்வரும் 3ஆம் திகதி வரை பொது இடங்களில் மற்றும் போக்குவரத்து பயணத்தின் போது மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 4 ஆம் திகதி முதல் ஜேர்மனியில் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கும் சமய நிகழ்வுகளுக்கும் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மதுபானசாலைகள், திரையரங்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...