Main Menu

ஜெயலலிதா நினைவு இல்லத்தில் மக்களை அனுமதிக்க தடை நீட்டிப்பு

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவு இல்லமாக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தனர். 

மேலும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.
இதனிடையே போயஸ்இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் வழக்குகளை சேர்த்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

பகிரவும்...