Main Menu

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3 டபிள்யூ) திட்டம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்ற திட்டம் பல நாடுகளில் ரயில்கள், வீதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு நிதியளிக்க உதவியுள்ள அதேவேளை சில நாடுகளை கடனுக்குள் தள்ளும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், ஜி 7 திட்டத்திற்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகின் ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளான ஜி 7 எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்கும் புதிய திட்டத்திற்கும் உறுதியளித்துள்ளது.

பகிரவும்...