Main Menu

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தப்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும், ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

கடந்த 73 ஆண்டுகளாக வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக  அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அத்தகைய அடக்குமுறைகள் தற்போது  மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே  மலையக தலைமைகள் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், இத்தகைய நிலைமைகளை உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இணைந்து செயற்படுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...