Main Menu

ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல்: தகவல் வழங்கினால் 796,000 டொலர் சன்மானம்

ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை வழங்கினால் 796,000 டொலர் சன்மானத்தை வழங்குவதாக கொலம்பியா அறிவித்துள்ளது.

வெனிசுவேலாவின் எல்லைக்கு அருகிலுள்ள கோகட்டா விமான நிலையத்தை நோக்கி ஜனாதிபதி ஐவன் டியூக் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஹெலிகாப்டரின் ரோட்டார் மற்றும் வால் ஆகியவற்றில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்திருந்தன. இருப்பினும் விமானத்தில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு ஏ.கே .47, மற்றும் 7.62 கலிபர் துப்பாக்கி என்பன கோகட்டா சுற்றுப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...