Main Menu

ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பு – அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக டொனால்ட டிரம்ப் நாளை பதவியேற்கிறார்.
இதனைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.
அவர் நாளை (திங்கட்கிழமை) அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அருகே பொது வெளியில் நடத்தப்படும் நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படவுள்ளது.
டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரம்ப் சீனா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
டிரம்ப் பதவியேற்பு விழாவில் சீனா அதிபர் ஜின்பிங் சார்பில் துணை அதிபர் ஹான் ஜெங் கலந்துகொள்கிறார்.
அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் சீன மூத்த அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதேமுதல் முறையாகும்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
பகிரவும்...
0Shares