Main Menu

மட்டக்களப்பில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

கிராமங்களில் உள்ள பெரும்பாலான உள்வீதிகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதால் போக்குவரத்தும் சற்று பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது.
பகிரவும்...
0Shares