Main Menu

சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் தர்பார்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளைய தினம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் படம் தான் ‘தர்பார்’. லைகா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதால், இந்த படம் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்பார் படத்தோடு வேறு எந்த படமும் வெளியாவதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆகையால் தர்பார் படம் தனியாக வெளியாவதால் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளிலும், இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பகிரவும்...