Main Menu

சீன அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்தார்

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றார். விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்த அவரை சீன கலாசார துறை மந்திரி லுவோ ஷூகாங் மற்றும் பாகிஸ்தானுக்கான சீன தூதர் யா ஜிங் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜின்பிங் உடனான சந்திப்பின்போது வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு 3-வது முறையாக சீனா சென்றுள்ளார். சீனா அதிபர் ஜின்பிங் இன்னும் 2 நாட்களில் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ள நிலையில் இம்ரான்கானின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

பகிரவும்...