Main Menu

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டனர்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளில் 108 ஆக இருந்தது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் 86 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் நேற்றைய தினமும் பாதிக்கப்பட்டவர்களில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 79 பேர் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வடகிழக்கு மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இப்போது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 82,249 ஆகவும் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,341 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பகிரவும்...