Main Menu

ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானம்!

ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது.

விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயினில் சில ஊழியர்கள் தொழிலுக்கு திரும்ப ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 3 வாரங்களில் முதன்முறையாக தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்பெயினில் பல்பொருள் அங்காடிகள், பழக்கடைகள், வெதுப்பகங்கள், மருந்தகங்கள் மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...