சீனாவில் உடற்பயிற்சி செய்தவர்கள் மீது மகிழுந்து மோதி விபத்து – 35 பேர் பலி
சீனாவின் ஷுஹாய் (Zhuhai) நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மகிழுந்து ஒன்று வேகமாக மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த விபத்தையடுத்து அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
பகிரவும்...