ஆணையிறவு வீதி திறக்கப்பட்டது
கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த போது அந்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் ஆணையிறவு வீதி திறக்கப்பட்டது.
அதன் பின்னர் 8 வருடங்களின் பின்னர் அதாவது 2008 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டது.
சுமார் 17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆணையிறவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...