Main Menu

சிலி விமானக் கண் காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கம்

சிலியில் நடைபெறவுள்ள சர்வதேச விமானக் கண்காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கப்படும் என சிலி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

தென் அமெரிக்காவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிலியின் சான்டியாகோ நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 2024 கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என சிலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சிலி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கான காரணத்தை அவ்வமைச்சு அறிவிக்கவில்லை. ஆனால், இடதுசாரி ஜனாதிபதி கெப்ரியேல் போரிக், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். 

சிலியில் பெரும் எண்ணிக்கையான பலஸ்தீன மக்கள் வசிக்கின்றனர். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலுக்கான தனது தூதுவரை கடந்த ஒக்டோபர் மாதம் சிலி திருப்பி அழைத்திருந்தது.  

பகிரவும்...