Main Menu

சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல்

மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களில் உள்ள சுமார் 1500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அத்தோடு வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

வைத்தியசாலைகளில் இந்நிலை ஏற்பட்டால் நோயாளிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் உணவு கிடைக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பொதுநிர்வாக அமைச்சு, கல்வி அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.

பகிரவும்...