Main Menu

சிரியா மற்றும் ஈரான் தொடர்பாக ட்ரம்ப், மக்ரோன் தொலைபேசியில் கலந்துரையாடல்!

சிரியாவின் தற்போதைய நிலைவரம் மற்றும் ஈரான் அணுவாயுதச் சோதனைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனும் தொலைபேசியில் தீவிர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வௌியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா – பிரான்ஸ் ஆகியன சிரியாவில் ஒருங்கிணைந்து செயற்படுவது குறித்தும், ஈரானின் அணுசக்தி தொடர்பான அண்மைய முன்னகர்வுகள் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லண்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்தநாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரையறையும் விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் குறித்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.

அத்துடன், ஈரான் மீது மீண்டும் மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகின்றது.

சிரியாவில் துருக்கியின் ராணுவத் தாக்குதலுக்கு பின்னர், சிரியா மற்றும் துருக்கிப் படைகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

பகிரவும்...