Main Menu

இத்தாலியில் கடும் வெள்ளப்பெருக்கு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்றிரவு வரை 187 சென்டி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

புனித மார்க் சதுக்கம், பசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதன்காரணமாக பேரழிவு கால அவசர நிலையை அறிவிக்கவுள்ளதாக வெனிஸ் நகர மேயர் Luigi Brugnar தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிவாரணப் பணிகளுக்காக இத்தாலி அரசாங்கத்திடமிருந்து நிதி கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...