Main Menu

சிரியாவில் உக்கிரமடையும் உள்நாட்டுப் போர் – 26 குழந்தைகள் உயிரிழப்பு!

சிரியாவில் உக்கிரமடைந்துள்ள உள்நாட்டுப் போர் காரணமாக 26 குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், சந்தைகள் மற்றும் உணவகங்களில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிச்செல் பச்சலெட் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளிகளே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் ‘வெளிப்படையான சர்வதேச அலட்சியத்தால்’ நடைபெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உலகின் வலிமைவாய்ந்த நாடுகளில் உள்ள தலைமையின் தோல்வி இது எனவும் மிச்செல் தெரிவித்துள்ளார்.

இட்லிபில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும், சர்வதேச கட்டுப்பாட்டுக்கு வெளியே இந்த போர் சென்றுவிட்டதாகவும், இதன்காரணமாக ஐ.நாவினால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சர்வதேச தாக்குதல்கள் போர் குற்றங்களாகும். அந்த தாக்குதலுக்கு ஆணையிட்டவர்கள், அல்லது நடத்தியவர்கள்தான் அதற்கு பொறுப்பு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பகிரவும்...