Main Menu

சாலமன் தீவில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் – ஐ.நா. பொதுசெயலாளர் வேண்டுகோள்

சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது கலவரம் நடந்த பகுதியில் இருந்து உடல் கருகிய நிலையில் 3 சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

அண்டோனியோ குட்டரெஸ்ஹோனியாரா:
தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்நாட்டின் பிரதமராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே. 
சமீபத்தில் இவர், தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் ஹோனியாராவில் உள்ள பாராளுமன்றம் முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. அப்போது போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடத்துக்கும், அதனருகே உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கும் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, கலவரம் நடந்த பகுதியில் இருந்து உடல் கருகிய நிலையில் 3 சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.
இந்நிலையில், சாலமன் தீவில் ஏற்பட்ட வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும், சாலமன் தீவில் அமைதி திரும்பும் வகையில் அத்தீவு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். தொடர்ந்து அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...