Main Menu

சாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

எசெக்ஸில் 39 குடியேறிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லொறிச் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்

2018 மே 1 முதல் 2019 ஒக்ரோபர் 24 வரை சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவ மற்றவர்களுடன் சேர்ந்து இயங்கியதாக லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கவுண்டி அர்மாக் பகுதியைச் சேர்ந்த 25 வயதான மோ ரொபின்சன் சட்டவிரோதமாக இங்கிலாந்திற்கு மக்களை அழைத்து வருவதற்கான பெரிய சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 23 அன்று எசெக்ஸின் கிரேஸில் மோ ரொபின்சன் இயக்கிய லொறியின் பின்புறத்திலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் சிறுவர்கள் உட்பட 39 வியட்நாமியர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போதே மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவத்தில் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் உயிரிழந்தனர்.

பெல்மர்ஷ் சிறையில் இருந்து வீடியோ இணைப்பு வழியாகத் தோன்றிய ரொபின்சன், 2018 மே 1 முதல் 2019 ஒக்ரோபர் 24 வரை சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவி செய்ததற்காக பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.

மனிதக் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் ஆட்கடத்தல் குற்றங்களைச் செய்ததாகவும், இதற்காக சட்டவிரோதமாகப் பணம் பெற்றுக்கொண்டார் என்றும் மோ ரொபின்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...