Main Menu

சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்ததில்லை – கோத்தாபய

சவால்களை கண்டு ஒருபோதும் மனம்  தளரவில்லை அனைவருக்கும்   நெருக்கடியாக இருந்த 30 வருட காலத்தை சிறந்த திட்டமிடலுருக்கு அமைய முடிவுக்கு கொண்டு வந்தேன்.  தற்போது நாடு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகிய இவ்விரண்டும்  பாரிய  சவாலுக்குட்பட்டுள்ளது.  இந்த சவால்களையும் குறுகிய காலத்திற்குள் வெற்றிக் கொண்டு  ஊழல்மோசடியற்ற  அரசாங்கத்தை உருவாக்குவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ருவன்வெல்லவில் இன்று இடம் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல தேவைகளை  கருத்திற் கொண்டு  தேர்தல் கொள்கை பிரகடனத்தினை  வெளியிடவில்லை. மக்களின்  அடிப்படை பிரச்சினைகள், தேசிய பொருளாதார முன்னேற்றத்திற்கான  மார்க்கம்  ஆகியவற்றை துறைசார் நிபுணர்களுடன் ஒன்றினைந்து  ஆராய்ந்து  தேர்தல் கொள்கை பிரகடனத்தினை  வெளியிட்டுள்ளேன்.

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் அரசாங்கத்தினை  எம்மால் நிச்சயம் உருவாக்க முடியும். தேசிய நிதி மோசடியற்றதும்,   நாட்டின் இறையாண்மையில் பிறிதொருவர் தலையிட முடியாத அளவிற்கு  பலமான  அரசாங்கம்   விரைவில்  ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

பகிரவும்...