Main Menu

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நயன்தாராவின் திரைப்படம்!

நடிகை நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படம் பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறவுள்ள செய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்த திரைப்படம்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...