Main Menu

ஜூன் 1 : பிரான்ஸ் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது

இன்று ஜூன் 1 ஆம் திகதி, புதிய மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது?
எரிவாயு கட்டணம்
எரிவாயு கட்டணம் 4.4% வீதத்தால் விலை அதிகரிப்பை சந்திக்கின்றது. இதில் சமையலுக்கு மாத்திரம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு 1.2% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கு 2.6% வீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 4.6% வீதமும் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.

இத்தகவலை எரிசக்தி ஆணையம் ( la Commission de régulation de l’énergie) அறிவித்துள்ளது.

குளிர்கால விடுப்பு நிறைவு
இன்று ஜூன் 1 ஆம் திகதியுடன் குளிர்கால விடுப்பு நிறைவுக்கு வருகின்றது. ஒவ்வொரு வருடம் ஏப்ரல் 1 ஆம் திகதி நிறைவுக்கு வரும் இந்த குளிர்கால விடுப்பு (la trêve hivernale) இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டது.

இந்த விடுப்பின் போது, வாடகைக்கு குடியிருப்பவர்களை அதன் உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை எனும் காரணத்தை காண்பித்து அவர்களை வெளியேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஃபிள் கோபுர அனுமதிச் சீட்டு
ஈஃபிள் கோபுர நுழைவுச் சிட்டைகளுக்கான முன்பதிவுகள் இன்று ஆரம்பிக்கின்றன. ஈஃபிள் கோபுரம் வரும் ஜுலை 16 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதை அடுத்து அதற்கான முன்பதிவுகள் இன்று ஜூன் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. (குறிப்பு : இணையத்தளத்தினூடாக மாத்திரமே முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.)

சுகாதார பாதுகாப்பு அனுமதி ( le pass sanitaire)
1000 பேருக்கு மேல் ஒன்றிணையும் நிகழ்வுகளுக்கு le pass sanitaire எனும் ‘சுகாதார அனுமதிச் சீட்டு” இம்மாதத்தில் கட்டாயமாக்கப்படுகின்றது. இதில் உங்களது விபரங்களுடன், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விபரங்களும் பதியட்டிருக்கும். பெருமளவான மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு கட்டாயமாக le pass sanitaire இருந்தால் மாத்திரமே அனுமதிக்கப்படும் எனும் இந்த சட்டம் இம்மாதம் 9 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

பகிரவும்...