Main Menu

சர்வதேச கடன் வழங்குநர்கள் ஏழை நாடுகளுக்கு வழங்கிய முக்கிய சலுகை

ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையினை வசூலிப்பதைத் தளர்த்த பிரதான சர்வதேச கடன் வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெற்ற உலகின் வளர்ந்துவரும் நாடுகள் அதனை மீள வழங்குவது தொடர்பாக நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு வறுமை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையினை வசூலிப்பதைத் தளர்த்துவதற்கு உலகின் பிரதான கடன் வழங்குநர்கள் தீர்மானித்துள்ளனர்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பொருளாதாரத் துறையினர் இன்று காணொளி வழியாக குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும், இதன்போது இவ்விடயத்துக்கான இருந்து தீர்வு எட்டப்படும் எனவும் பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் லீ மரியோ தெரிவித்துள்ளார்.

மேலும், 40 ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட 76 நாடுகளால் செலுத்தப்பட வேண்டிய ஏறக்குறைய 20 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வசூலிப்பதை உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  மேலும் பல தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொடை மீள வழங்குவது குறித்து ஆலோசித்து தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

1930 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே உலகப் பொருளாதாரம் அதீத வீழ்ச்சி அடைந்துள்ளது என பிரான்ஸ் நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...