Main Menu

சர்வதேசத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ்

தனக்கு சர்வதேசத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள வாடி வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “1977ம் ஆண்டில் இருந்து தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கிடையில் ஐக்கியம் அவசியம், அத்துடன் நடைபெறுகின்ற எந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை கூட்டாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளிற்கு தீர்வுகான முடியும் என்று மக்களுக்கு பொய் கூறி கடந்த காலங்களில் வாக்குகளை அபகரித்து வந்தார்கள். இன்று வரை தென்னிலங்கைக்கு ஐக்கியத்தை காண்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

சர்வதேச சமூகத்துக்கு காண்பிக்க வேண்டும் என தெரிவித்தார்கள், மேலும் இதன் ஊடாகவே பிரச்சனைக்கு தீர்க்க முடியும் என்று தெரிவித்தார்கள். ஆனால் மக்களுடைய பிரச்சனைகள் தீராத பிரச்சனையாக இழுபட்டுக்கொண்டு இருக்கின்றது.

தமிழ் மக்களிடம் இவர்களிற்கு தற்துணிவு இருக்குமேயானால், அல்லது இவர்களுக்கு மக்கள் தொடர்பான உண்மையான அக்கறை இருக்குமேயானால் இவர்கள் தனித்தனியே போட்டிபோட்டு மக்களின் ஆனையை பெற்று வென்று வந்து பின்னர் ஐக்கியப்பட்டால்தான் தமிழ் மக்களுடைய பிரச்சனையை இலகுவாக தீர்க்க முடியலாம் என்பதை எனது அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன்.

தமிழ் அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, இழந்து போன செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக பேசப்படுகின்ற வடயங்களே இவையாகும். எனக்கு சர்வதேசத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது.

அதேபோல் இதை தீர்மாணிப்பது எங்களுடைய மக்கள். எங்களுடைய மக்கள் வருங்காலங்களில் தங்களுடைய பிரதிநிதிகளாக சரியானவர்களை தெரிவு செய்வார்களே ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்” என கூறினார்.

இதேவேளை  கடந்த ஆட்சிக் காலத்தில் வெடுக்குநாரி விவகாரத்திற்கு தீர்வு காணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்திய தடங்கல் காரணமாக குறித்த பிரச்சினை தற்போதும் நீடித்து வருவதாகவும் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.

பகிரவும்...