Main Menu

வடக்கு மாகாண ஆளுநராக எஸ்.எம்.சார்ள்ஸ் ?

வடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் முன்னாள் சுங்க பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளருமான சார்ள்ஸ் விரைவில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “வடக்கு ஆளுநர் பதவியை முரளிதரன் ஏற்கவில்லை. பி.எம்.எஸ்.சார்ள்ஸை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர் விருப்பம் தெரிவித்தால் ஆளுநராக நியமிக்கப்படுவார்” என கூறியிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவருகின்ற நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர், பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...