Main Menu

சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – கெமுனு விஜேரத்ன

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வகட்சி ஆட்சியமைப்பதே சிறந்த வழி எனும் சூழ்நிலையில்  (அரகலய)  போராட்டத்தில்  ஈடுபட்ட ஐவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர்  இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்கும் முயற்சியில் இளைஞர்கள் தங்களது புதிய யோசனைகளுடன் பாராளுமன்றத்தில் பிரவேசிக்க வேண்டும்  என்பதோடு    அதிக வயதான அமைச்சர்களை பாராளுமன்ற ஆசனங்களில் இருந்து நீக்குமாறும் அவர்களுக்கு பதிலாக மேற்படி நபர்களை நியமிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  விகிதாச்சார வாக்களிப்பு முறையின் கீழ், அதே பழைய போத்தலை கழுவிய பின் புதிய மதுவை நிரப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றதோடு  அதிக வயதான அமைச்சர்கள் நாட்டின் எதிர்கால பயணத்தில் நாட்டின் நன்மைக்காக பங்களிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர்  குறிப்பிட்டுள்ளனர் .

இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...