Main Menu

சந்திரயான் 2 விண்கலம் : சமிக்ஞை கிடைக்க வாய்ப்பு?

சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக கட்டுபாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 2 லேண்டர் மற்றும் ரோவர்களில் சமிக்ஞை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், ‘நாம் இதை இருவகைகளில் பார்க்க முடியும். ஒன்று லேண்டர், இறங்கி நொறுங்கி விழுந்து இருக்கலாம்.

அப்படி நடந்து இருந்தால் அல்லது ஏதாவது பள்ளத்தில் தரையிறக்கி இருந்தால் திட்டம் தோல்வியடைந்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்கி இருக்கலாம் அதன் பிறகு ரோவர் பிரக்ஞானுக்கு கிடைக்க வேண்டிய எரிசக்தி சூரிய ஒளியிலிருந்து கிடைக்காமல் இருக்கலாம்.

சூரிய ஒளியிலிருந்து எரிசக்தி கிடைத்ததும் அது செயல்படத் ஆரம்பித்து அங்கே இருந்து நமக்கு சிக்னல்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனுக்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கியதும், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து, அது சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பதே சந்திரயான் 2வின் திட்டமாகும்.

பகிரவும்...