Main Menu

கோப் குழுவிலிருந்து அநுர குமார உள்ளிட்ட 9 பேர் இதுவரை விலகல்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (19) மேலும் மூவர் இராஜினாமா செய்துள்ளதுடன், அக் குழுவிலிருந்து இன்று வரை ஒன்பது உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, வசந்தயாப்பா பண்டார,மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் தமது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்

கோப்குழு தலைவராக  பொதுஜன பெரமுன உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து  அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தக் குழுவிலிருந்து  உறுப்பினர்கள் தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.

மேற்படி குழுவிலிருந்து கடந்த திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி எம். பி எரான் விக்ரமரட்ன பதவி விலகியதையடுத்து நேற்று முன்தினம்  எதிர்த்தரப்பு சுயாதீன எம்.பிக்களான  தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களான  ஹேஷா விதானகே, , எஸ்.எம்.மரிக்கார் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பி சாணக்கியன் ஆகியோரும் பதவி விலகினர்.

தமது பதவி விலகல் தொடர்பில் நேற்று தயாசிறி ஜயசேகர, ஹேஷா விதானகே, சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு அது தொடர்பில் விளக்கமளித்தனர்.

அத்துடன் வசந்தயாப்பா பண்டார மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தங்களது பதவி விலகல் தொடர்பில்  நேற்று சபைக்கு அறிவித்தனர். அதேநேரம் துமிந்த திஸாநாயக்க தனது பதவி விலகலை  தொலை நகல்  மூலம் அறிவித்துள்ளார்.

பகிரவும்...