கோப் குழுவின் தலைவராக அரவிந்த செனரத் தெரிவு

10 ஆவது நாடாளுமன்றத்தின், கோப் எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தினதும் அதன் அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றினதும் முகாமைத்துவ வினைத்திறனையும் நிதி ஒழுக்காற்றையும் ஆராய்வதே இந்த குழுவின் பிரதான பணியாகும்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.