Main Menu

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை-அரசாங்கம்

இந்தியாவின் அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்துள்ளதாக எகனொமிக் டைம்ஸ் செய்திகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
ஒப்பந்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையில், 20 வருட மின்சார கொள்முதல் ஒப்பந்தமொன்று கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டது.
பகிரவும்...
0Shares