Main Menu

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது ரஷ்யா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தொடர்ச்சியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த ஆறாவது நாளும் பதிவானது.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,699பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 98பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 187,859ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,723ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின் தள்ளி ரஷ்யா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன், ரஷ்யா தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 159,528பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 26,608பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...