Main Menu

கொவிட்-19 விவகாரத்தில் உலகளாவிய தொழில் நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும்: போப் ஆண்டவர்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான மருத்துவ வசதி பெறுவதில், உலகளாவிய அத்தியாவசிய தொழில்நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அப்போஸ்தல அரண்மனை நூலகத்தில் இருந்தபடி ஆசி வழங்கிய பின்னர், மக்கள் முன்னிலையில் உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரசுக்கு பாதுகாப்பான, உறுதிவாய்ந்த தடுப்பூசி கண்டறியும் பணி பல நாடுகளில் ஏற்கனவே நடந்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வௌ;வேறு மருந்துகளை பயன்படுத்திய அனுபவங்களை விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.

தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். நோய்வாய்ப்பட்ட ஒருவர் மருத்துவ வசதி பெறுவதில், உலகளாவிய அத்தியாவசிய தொழில்நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

மேலும், கொரோனா பிரச்சினையில் இருந்து மனிதர்கள் மீள கடவுளை வேண்டி, அனைத்து மதத்தினரும் வருகிற 14ஆம் திகதி பிரார்த்தனை, நோன்பு மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும்’ என கூறினார்.

7 ஆண்டுகளாக போப் ஆண்டவராக இருந்துவரும் பிரான்சிஸ், கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பத்தில் லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பிரார்த்தனை கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது அதிலிருந்து மீண்டுவந்துள்ள நிலையில் மீண்டும் பிரார்த்தனைகள் ஆரம்பமாகியுள்ளன.

இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வத்திக்கானில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வத்திக்கான் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவைக்கு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...